இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆயுள் தண்டனை : நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை பாக்கியலட்சுமி கருத்து | தியேட்டரில் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் : சமாதானப்படுத்திய நடிகை | திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை : ஸ்வேதா மேனன் | 11 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் | அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி | நடிகை பாலியல் கடத்தல் வழக்கு : ஆறு பேருக்கு 20 வருட சிறை | ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்? | 'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை |

கடந்த 2009ம் ஆண்டில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான், சர்மான் ஜோஷி, மாதவன், கரீனா கபூர் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் '3 இடியட்ஸ்' . இந்த படத்தை தமிழில் ஷங்கர் 'நண்பன்' என்கிற பெயரில் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'டன்கி' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து அவரும், அமீர் கானும் இணைந்து 'தாதா சாகிப் பால்கே' வாழ்க்கை வரலாற்றை படமாக்க பணியாற்றி வந்தனர். அவர்களுக்கே திரைக்கதை திருப்தி அளிக்காததால் கைவிட்டனர்.
இந்த நிலையில் நீண்ட வருடங்களாக பாலிவுட் ரசிகர்கள் காத்திருந்த 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை பணியை ராஜ்குமார் ஹிரானி தொடங்கியுள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். முதல் பாகத்தில் அமீர் உள்ளிட்ட நடிகர்களே இதிலும் தொடருகிறார்களாம்.