கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் |

ராம் கோபால் வர்மா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜுனா, அமலா, ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'சிவா'. தெலுங்குத் திரையுலகத்தின் 'டிரென்ட் செட்டர்' ஆக அமைந்த இந்தப் படம் நாளை மறுதினம் டிஜிட்டல் தரத்தில் ரிரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சியை முடித்த பிறகு இயக்குனர் ராம்கோபால் வர்மா, நாகார்ஜுனா பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ராம் கோபால் வர்மா, “1972ல் வெளியான ‛தி வே ஆப் டிராகன்'(ரிட்டர்ன் ஆப் தி டிராகன்) படத்தில், ப்ரூஸ் லீ ரோம் நகருக்குப் போகிறார். அங்கு ரெஸ்டாரன்ட்டில் தொந்தரவு செய்யும் ரவுடிகளுடன் சண்டையிடுகிறார். நான் ரெஸ்டாரன்ட் என்பதை கல்லூரி என்று மாற்றினேன், அதோடு என் சொந்த அனுபவங்களை சேர்த்தேன். இது, நான் எழுதியதில் வேகமான ஒரு வரிக் கதையாக இருக்கலாம்” என்று ராம் கோபல் வர்மா கூறினார்.
ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு காட்சியிலிருந்து அல்லது கதாபாத்திரத்திலிருந்து 'இன்ஸ்பயர்' ஆகித்தான் பல படங்களின் ஒரு வரிக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதை திரைக்கதையாக எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் படத்தின் வெற்றி அமைகிறது. அந்த விதத்தில் 'சிவா' படத்தின் வெற்றி அமைந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொண்டாடப்படுகிறது.