தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'டுயூட்'. இப்படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இப்படத்தை அக்டோபர் மாதமான தீபாவளிக்கு வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தீபாவளியை முன்னிட்டு அந்த தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள மற்றொரு படமான 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவித்துள்ளார்கள்.
ஒரே வாரத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இரண்டு படங்களும் வெளியாக வாய்ப்பில்லை. அதனால், 'டுயூட்' படம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த மூன்று வாரங்களாக ஸ்டிரைக் நடந்து வந்தது. அதனால், அங்கு எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை, ஸ்டுடியோக்களும் செயல்படவில்லை. இன்று முதல்தான் பழையபடி பணிகள் ஆரம்பமாக உள்ளன.
'டுயூட்' படத்தை தெலுங்கு நிறுவனம் தயாரிப்பதால் இதன் பணிகள் ஐதராபாத்தில் தான் நடந்து வருகிறது. எனவே, கடந்த மூன்று வாரங்களாக எந்த வேலையும் நடக்காததால் அவர்களும் படத்தைத் தள்ளி வைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்களாம். அதனால்தான், 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படத்தின் வெளியீடு பற்றி நேற்று அறிவித்துள்ளார்கள்.