பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

வருகிற 14ம் தேதி வெளிவர இருக்கும் 'கூலி' படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டிரைலரில் ரஜினி ஸ்ருதியிடம் "உனக்கு அவன் அப்பன்தான்... எனக்கு நண்பன்" என்று சொல்லும் வசனம் கவனம் பெற்றது.
கூலியில் நடித்திருப்பது குறித்து ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது: நான் எந்த இசை ஆல்பம் தயாரித்தாலும் அதில் நடிப்பவர்கள் பற்றி அதிக கவனம் செலுத்துவேன். லோகேஷ் கனகராஜ் பெரிய நடிகர் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதை வைத்து அவரை எனது ஆல்பத்தில் நடிக்க வைத்தேன். அவர் இப்போது என்னை அவர் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். 'ரஜினி சார் படம் நீங்க நடிச்சா நன்றாக இருக்கும்' என்று சொன்னபோது அதை என்னால் எப்படி மறுக்க முடியும்.
ரஜினியுடன் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம். நான் மிகவும் மனப்பூர்வமாக விரும்பிய ஒன்று. என்னை மட்டுமல்ல, உடன் நடிக்கும் எல்லோரையும் அன்போடு அரவணைத்து செல்வார். அந்த அரவணைப்பு எனக்கும் கிடைத்தது.
அவர்கிட்ட மனம் விட்டுப் பேசுவேன். அப்பாவுக்கும் அவருக்குமான நெருக்கமான நட்பு பற்றி நிறைய விஷயங்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதை வெளியில் சொல்ல மாட்டேன். ஏனென்றால் கமல் மகள் என்கிற முறையில் அவர் என்னிடம் சொன்னது எனக்கு பொக்கிஷம். அவர்களின் நட்பு இனிமையான , இறுக்கமான நட்பாக இருக்கிற ரகசியம் அந்த பொக்கிஷத்தில் இருக்கிறது. என்கிறார் ஸ்ருதி.