ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

ஒரு படம் ரிலீஸ் ஆன சில நாட்களில் சக்சஸ் மீட் அல்லது நன்றி அறிவிப்பு விழா நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஒருபடி மேலேபோய் படம் ரிலீஸ் ஆன அன்றே நடத்திவிடுகிறார்கள், ஹரி ஹர வீரமல்லு, கிங்டம் படத்துக்கு அப்படி நடந்தது. இப்போது உண்மையிலே வெற்றி பெற்று இருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி. 75 கோடிவரை வசூலித்துள்ளது. பின்னே ஏன் சக்சஸ் மீட் நடத்தவில்லை. விஜய்சேதுபதி மீது பாலியல் புகார் வந்ததால், அது குறித்து யாராவது கேள்வி எழுப்புவார்கள், மீடியாவில் சர்ச்சை ஆக, இந்த சந்தோஷமான நேரத்தில் இமேஜ் டேமேஜ் ஆகும் என விஜய்சேதுபதி தயங்குகிறாரா என விசாரித்தால், அதுவும் ஒருவகை காரணம்.
ஆனாலும் 100 கோடி வந்தபின் சக்சஸ் மீட் வைக்கலாம் என படக்குழு நினைக்கிறது. ஒருவேளை விஜய்சேதுபதி நேரம் ஒதுக்கினால் இந்த வாரம் அந்த நிகழ்ச்சியை நடத்தலாம். மகாராஜா படத்துக்கு இப்படியொரு சக்சஸ்மீட்டை நடத்தினார் விஜயசேதுபதி. ஆனால், தலைவன் தலைவியில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருப்பதால் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இருக்கிறது. விஜய் சேதுபதியும் புரிஜெகன்நாத் இயக்கும் படத்தில் பிஸி. ஆகவே சக்சஸ் மீட் பணிகள் தள்ளிப்போகிறது. எப்படியும் நடத்தியே ஆக வேண்டும் என்று படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் உறுதியாக இருக்கிறதாம்.