இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய், அடுத்தபடியாக முழு நேர அரசியல்வாதியாக உருவெடுக்கிறார். இந்த நிலையில், விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு தைரியம் வந்ததற்கு இதுதான் காரணம் என்று சொல்லி நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், கல்யாணசுந்தரம் போட்டோ செஷனோடு முடிந்தது. கைவிடப்பட்ட படம். ஆனால் பூஜை அன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்த செலவில் தாலி முதல் மெட்டி வரை தட்டு பொட்டு சாமான்களும் சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி வைத்தேன். அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னொரு காலத்தில் விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய்தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு கட்சி துவங்கும் தைரியம் வந்தது என்று தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.