பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் பான் இந்தியா படமாக வெளியான படம் 'குபேரா'. தமிழில் வரவேற்பு பெறாமல் போனாலும், தெலுங்கில் வெற்றிப் படமாக அமைந்து 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. படத்தில் தெலுங்கு வாடை அதிகம் இருந்ததால் தமிழ் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
நேற்று ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் தற்போது டாப் 10 படங்களில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. அதிலும் தெலுங்குப் பதிப்பு முதலிடத்திலும், தமிழ்ப் பதிப்பு இரண்டாம் இடத்திலும் உள்ளது. தியேட்டர்களில் தான் தெலுங்குப் பதிப்புக்கு முதல் வரவேற்பு என்று நினைத்தால் ஓடிடி தளங்களிலும் அப்படியான வரவேற்பே இருக்கிறது.
இதனிடையே, தனுஷ் நடித்து அடுத்த தியேட்டர்களில் வெளியாக உள்ள 'இட்லி கடை' படத்திற்கான அப்டேட் விரைவில் வரும் என அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.