மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்திரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா, சவுபின் ஷாகிர், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கூலி'. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் வியாபாரம் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடந்து வருகிறது.
தற்போதைய தகவல்படி இப்படத்தின் வியாபாரம் மொத்தமாக 500 கோடியைக் கடக்கும் என்று பேசி வருகிறார்கள். இப்படத்தின் வியாபாரம் பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று சுற்றி வருகிறது. தமிழக உரிமை 100 கோடி, வெளிநாட்டு உரிமை 80 கோடி, வட இந்திய உரிமை 50 கோடி, தெலுங்கு உரிமை 40 கோடி இதர மாநில உரிமைகள் சேர்ந்து சுமார் 300 கோடி வரை நடந்திருக்க வாய்ப்புள்ளதாம். இந்த 300 கோடியை வசூலிக்க 600 கோடி வரை படம் வசூல் செய்ய வேண்டும். அதற்கும் அதிகமாக வசூல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படம் 600 கோடி வசூலைக் கடந்தது. அதனால், அந்தப் படத்தை இது நிச்சயம் கடக்கும் என்று சொல்கிறார்கள். மல்டி ஸ்டார் காம்பினேஷன் இந்தப் படத்தில் இருப்பதும் ஒரு காரணம். தமிழில் ரஜினி நடித்து வெளிவந்த '2.0' படம் 800 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தின் வசூலையும் 'கூலி' கடக்கலாம் என்றும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
தியேட்டர் வியாபாரம் தவிர ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ என இதர உரிமைகள் மட்டுமே 200 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இந்த 200 கோடி, பிளஸ் தியேட்டர் வியாபாரம் 300 கோடி என மொத்தமாக 500 கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கலாம். தமிழ் சினிமாவில் இதுவரையில் நடந்திருக்காத வியாபாரம் இந்தப் படத்திற்கு நடக்கும் என்பது உறுதி என்ற தகவல் மட்டும் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறது.