கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
கொஞ்சம் மோசமாகதான் போய்க்கொண்டு இருக்கிறது தமிழ் சினிமா நிலவரம். இந்த ஆண்டு மத கஜ ராஜா, டிராகன், குடும்பஸ்தன், குட்பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன் போன்ற சில படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும் பல படங்கள் தோல்வி அடைந்தன. கடந்த சில மாதங்களில் டூரிஸ்ட் பேமிலி, மாமன் மட்டுமே நல்ல லாபத்தை கொடுத்த படங்களின் பட்டியலில் இடம் பெற்றது. டிஎன்ஏ ஓகே ரகம். அடுத்து வந்த படங்களில் பறந்து போ, 3பிஹெச்கே படங்கள் ஓடினாலும், பெரிய லாபத்தை தரவில்லை.
கடந்த வாரம் வந்த படங்களில் ஓஹோ எந்தன் பேபியும் ஓகே ரகத்தில் ஓடுகிறது. தேசிங்குராஜா 2, மிஸஸ் அண்ட் மிஸ்டர் படங்களுக்கு வரவேற்பு இல்லை. பைனான்ஸ் பிரச்னையால் சசிகுமாரின் ப்ரிடம் வெளியாகவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் ராஜூ நடித்த பன்பட்டர் ஜாம், ஜென்ம நட்சத்திரம், கெவி, யாதும் அறியான், களம் புதிது உட்பட 7க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. அடுத்த வாரம் பெரிய படமாக விஜய்சேதுபதியின் தலைவன் தலைவன், வடிவேலு, பகத்பாசில் நடித்த மாரீசன் வர உள்ளது. இதில் எந்த படம் ஓடுமோ என்று கவலையில் இருக்கிறார்கள் திரையுலகினர். ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பலரின் எதிர்பார்ப்புடன் ரஜினியின் கூலி ரிலீஸ் ஆக உள்ளது.