விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

இயக்குனர் மிஷ்கின் இடத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் ஸ்ரீ கணேஷ். அதன்பிறகு கடந்த 2017ம் ஆண்டில் 'எட்டு தோட்டாக்கள்' படத்தின் மூலம் இயக்குனரானார். பின்னர் அதர்வா நடிப்பில் 'குருதியாட்டம்' என்ற படத்தை இயக்கியவர், தற்போது '3 பிஎச்கே' படத்தை இயக்கி உள்ளார். சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகிபாபு, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஜூலை 4ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கப் போவதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வந்தது. அது குறித்து '3 பிஎச்கே' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடத்தில் கேட்டபோது, அந்த செய்தியை மறுக்கிறார். அதோடு, ''அஜித் குமார் ஒரு மிகப்பெரிய நடிகர். அதனால் அவர் நடிக்கும் படத்தை இயக்க வேண்டுமென்றால் நானும் வளர வேண்டும். அந்த அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய தரமான படங்களை இயக்கி என்னுடைய தகுதியை வளர்த்துக் கொண்டு அதன் பிறகு அஜித்தை சந்தித்து கதை சொல்லி அவரை வைத்து படம் இயக்குவேன்'' என்கிறார் ஸ்ரீ கணேஷ்.