தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
இந்தியில் தயாராகி வெளியான 'ஹிட்' வரிசை படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது. இதன் 3வது பாகத்தில் தெலுங்கு நடிகர் நானி நடித்தார். அவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சமுத்திரகனி உள்பட பலர் நடித்திருந்தார்கள். சைலேஷ் கொலனு இயக்கி இருந்தார், பிரசாந்த் திபிமெனியும், நானியும் இணைந்து தயாரித்திருந்தார்கள்.
ஒரே மாதிரி நடக்கும் 13 கொலைகள், அதன் பின்னணியில் இருக்கும் கொடூர ஆன்லைன் நெட் ஒர்க். அதை ஹீரோ எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த நிலையில் இந்த படம் எனது கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளது என்று தென்காசியை சேர்ந்த கே.விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''ஏஜென்ட் 11 என்ற கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2022ம் ஆண்டு பதிவு செய்தேன். 'சைக்கோ கில்லர்' கதையை மையமாக வைத்து இதை எழுதினேன்.
இந்த கதையை பிரபல நடிகர் நானியின் நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைத்தேன். அதே ஆண்டு 'ஏஜென்ட் வி' என்ற பெயரில் நாவலாகவும் வெளியிட்டேன். இந்தநிலையில் என் கதையை மையமாக வைத்து, நடிகர் நானி நடித்துள்ள 'ஹிட் 3' என்ற திரைப்படமாக எடுத்து கடந்த மே மாதம் வெளியாகி உள்ளது. இந்த படம் இதுவரை 100 கோடி வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, இந்த படத்தின் வருமானத்தில் 20 சதவீதத்தை எனக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் நடிகர் நானி, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.