சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |
தான் வேலை பார்த்து வந்த இடத்தில், தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தயாரிப்பு நிர்வாகி மீது "பெப்சி" உமா கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சியான "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா. அப்போது முதல் "பெப்சி" உமா என்று அழைக்கப்பட்டவர், பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளை தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் கால் பதித்துள்ளார். தற்போது ஒரு டி.வியில் "ஆல்பம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அந்த டி.வி.யின் தயாரிப்பு நிர்வாகியான சரவணராஜன் என்பவர் உமாவுக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வேலையைவிட்டு நீக்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து உமா, சென்னை கிண்டி போலீசிடம் புகார் கொடுத்தார். உமாவின் புகாரை ஏற்ற போலீசார், சரவணராஜனை கைது செய்து, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.