பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. தற்போதைய கட்டுமான நிலவரம் பற்றிய வீடியோ ஒன்றை நடிகர் சங்கம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் நாசர் குரலில் ஒவ்வொரு தளத்திற்கான கட்டுமான நிலவரம் எப்படி உள்ளது என்ற வீடியோ அதில் உள்ளது.
ஆடிட்டோரியம், கன்வென்ஷன் ஹால், மினி கன்வென்ஷன் ஹால், டைனிங் ஹால், சங்க அலுவலகம், வாடகைக்கு விடப்பட உள்ள அலுவலக தளம், பார்க்கிங் தளம் என ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளவை அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
“பெரிய ஒரு கனவு, நாங்கள் எடுத்துக் கொண்ட கடமை, இன்று நடப்பில், விலைவில் நிறைவுறும், கனவு நனவாகும், வானுயர ஓங்கி நிற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெருமை' என அந்த வீடியோவில் குரல் பதிவில் பேசியுள்ளார் சங்கத் தலைவர் நாசர்.
சில முன்னணி நடிகர்கள் நடிகர் சங்கத்திற்காகவும், கட்டிட நிதியாகவும் சில கோடிகளை வழங்கியதன் காரணமாக கட்டுமானம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சங்கக் கட்டிடத்தில்தான் தனது திருமணம் நடைபெறும் என அதன் செயலாளர் நடிகர் விஷால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். சமீபத்தில்தான் நடிகை சாய் தன்ஷிகாவைக் காதலிப்பது பற்றி இருவரும் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்கள். அவர்களது திருமணம், நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடக்கும் முதல் திருமணமாக இருக்க வாய்ப்புள்ளது.