ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' | ‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம் |

‛சகாப்தம், மதுரை வீரன்' படங்களை அடுத்து சண்முக பாண்டியன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛படை தலைவன்'. அவருடன் யாமினி சந்தர், கஸ்தூரிராஜா, எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ் காந்த், யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பம் மூலம் மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளார்கள்.
‛ரேக்ளா, வால்டர்' போன்ற படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ள இந்த படம் தமிழகம் முழுக்க 500 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இப்படம் முதல் நாளில் 1.30 கோடி வசூலித்த நிலையில், நேற்று இரண்டாம் நாளில் 1.22 கோடி வசூலித்து இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் இரண்டு தினங்களை விட அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.