தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா என தமிழ் சினிமாவின் டாப் கலைஞர்கள் இருந்தும் அப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. வசூலிலும் கூட படம் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பட வெளியீட்டிற்கு முன்பாக, இப்படம் மீதான நம்பிக்கையில் படத்தை ஓடிடியில் வெளியிட எட்டு வாரங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் செய்தனர். வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட எட்டு வார ஓடிடி இடைவெளி அவசியம். வழக்கம் போல நான்கு வாரங்களில் வெளியிடும் ஒப்பந்தம் இருந்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட முடியாது.
படம் ஒரு வாரமே தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தற்போது ஓடிடி வெளியீட்டை நான்கு வாரங்களில் வெளியிடவும், முன்னர் செய்த ஒப்பந்தப்படியான விலையைக் குறைக்கவும் ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 25 சதவீதம் வரை விலையைக் குறைக்கும்படியான பேச்சு நடந்து வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.