ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கி 246 பேர் வரை இறந்து போனார்கள். இந்த விபத்து நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலையும், பிரார்த்தனைகளையும் பதிவிட்டுள்ளார்கள்.
இந்த சோகமான சூழலில் சில திரைப்பட விழாக்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'குபேரா' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா, இன்று நடைபெறுவதாக இருந்தது. அதைத் தற்போது தள்ளி வைத்துள்ளனர். புதிய தேதியை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.
விஷ்ணு மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ள 'கண்ணப்பா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று இந்தூரில் நடைபெறுவதாக இருந்தது. அந்த விழாவையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
அதே சமயம் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய படங்கள் வெளியாகின்றன.