அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் |
தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக ஜொலித்தவர் மோகன். பொறியியல் படித்த அவர் ஆரம்பத்தில் அந்த வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். என்றாலும் நாடகத்தின் மீதுதான் அவருக்கு ஈர்ப்பு. மற்றவர்களின் நாடகத்தில் நடித்தவர், பின்னர் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இது பெரும் வெற்றி பெற்றது. இந்த நாடகத்தை பார்த்த கே.பாலச்சந்தர் சினிமாவுக்கென்று ஒரு கதை எழுதுமாறு சொன்னார். அதுதான் 'பொய்கால் குதிரை'. நாடகமும், படமும் ஹிட்டானதால் 'யாருப்பா இந்த மோகன்' என்று கேட்க அப்போது நிறைய மோகன்கள் இருந்ததால் 'கிரேஸி மோகன்' என்றார்கள். அதுவே அவரது பெயராக மாறியது.
அவரது நாடகங்களில் அவரது தம்பி பாலாஜி நடித்தார். நாடகத்தில் அவரது பெயர் மாது. கிரேஸி மோகன் இயக்கிய எல்லா நாடகத்தின் நாயகன் பெயரும் மாதுதான். அதுதான் பாலாஜி, 'மாது பாலாஜி' ஆனார். பின்னர் கமல்ஹாசன் அழைத்து 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்கு வசனம் எழுத சொன்னார். அவர் எழுதிய வசனங்கள் பெரிய ஹிட். கமல் அவரை தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.
கே.பாலச்சந்தர், கமல் படங்கள் அல்லாது வேறு பல படங்களுக்கும் வசனம் எழுதினார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் நாடகத்தையும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். கருணாநிதி, இளங்கோவன், ஆரூர்தாஸ், ஸ்ரீதர், பாலமுருகன், பாலசந்தர், பாக்யராஜ், சுஜாதா, ஏ.எல்.நாராயணன், பாலகுமாரன் வரிசையில் கிரேஸி மோகனுக்கும் இடம் உண்டு.
அண்மையில் நடந்த கிரேஸி மோகன் விழாவில் கமல் பேசியபோது குறிப்பிட்டார். 'எல்லோரும் செத்த பிறகு சொர்க்கத்துக்கு போக விரும்புவார்கள், ஆனால் மோகன் வாழும்போதே சொர்க்கத்தில் வாழ்ந்தவர்' என்றார். இன்று கிரேஸி மோகனின் 6வது நினைவு நாள்.