இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் |

கோலிவுட்டில் பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது அடிக்கடி நடக்கும். ஆனால், சிறிது காலத்தில் அவர்களின் பிரிவு செய்தியை மக்கள் மறந்துவிடுவார்கள் அல்லது அது வழக்கமான ஒன்றாகிவிடும். ஒருவர் பற்றி மற்றவர் குறை சொல்வது அரிது. தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்தார்கள், விஷ்ணுவிஷால், அவர் மனைவி ரஜினியை பிரிந்தார், ஜிவி பிரகாஷ் - சைந்தவியை பிரிந்தார். ஆனால், அவர்கள் தங்கள் பார்ட்னர் பற்றி மீடியாவில் பேசியது இல்லை, சண்டை போடவில்லை.
ஆனால், ரவி மோகன், ஆர்த்தி விஷயத்தில் சில வாரங்களாக இரண்டு பேரும் மாறி, மாறி சண்டை போட்டு அறிக்கை விட்டனர். ஒரு கட்டத்தில் கோர்ட் தலையிட அவர்கள் அறிக்கை போரை நிறுத்த வேண்டிய கட்டாயம். அடுத்து இந்த விவகாரத்தில் பேசப்பட்ட பாடகி கெனிஷாவும் சில அறிக்கை விட்டார். நேற்று தங்கள் மீது தவறாக பேசும் பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்த்தி அப்பா போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரும். இவர்களுக்குள் என்னதான் பிரச்னை? சட்டப்படி சில விவகாரங்கள் நடக்க, இவர்கள் மீடியா முன்பு சண்டைபோடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.