பாலிவுட் நடிகர் வீட்டில் பொய் சொல்லி நுழைந்த பெண் கைது | பள்ளி ஆசிரியர் டூ நடிகர் : ‛அந்த 7 நாட்கள்' ராஜேஷின் வாழ்க்கை பயணம் | “என் போதை பழக்கத்தால் வெளிநாட்டில் இருக்கும் என் சகோதரிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது” ; வில்லன் நடிகர் விரக்தி | மன்னிப்பு கேட்பதாக கூறிவிட்டு அவதூறு பரப்பி விட்டார் ; மேனேஜர் குற்றச்சாட்டுக்கு உன்னி முகுந்தன் பதில் | பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார் | மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? |
தெலுங்கு திரையுலகத்தில் அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தரப்பிலிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த ஸ்டிரைக் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் பிரபல தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்களான அல்லு அரவிந்த், தில் ராஜு பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தனர்.
இதனிடையே, தான் நடித்து ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீர மல்லு' படத்திற்கும் டிக்கெட் கட்டண உயர்வு கோரும் விண்ணப்பத்தை தயாரிப்பாளர் தெலுங்கு பிலிம் சேம்பர் வழியாகத்தான் அரசுக்கு அளிக்க வேண்டும் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது ஆந்திர மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ், குடிநீர் உள்ளிட்டவற்றை மிக அதிக விலைக்கு விற்கும் தியேட்டர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சுத்தமான குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றை அளிப்பதில் தியேட்டர்கள் முறையாக இருக்க வேண்டும். அது தியேட்டர் ஓனர்களின் அடிப்படையான பொறுப்பு எனக் கூறியுள்ளார்.
ஆந்திர அரசு வகுத்து வரும் விரிவான திரைப்பட மேம்பாட்டுக் கொள்கையில் சேர்க்க, தெலுங்கு திரைப்பட சங்கங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து திரைப்படத் துறையை வளர்ப்பதற்கான பரிந்துரைகளைப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தியேட்டர் ஸ்டிரைக் விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ள பவன், ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த அவரது கட்சி பொறுப்பாளர் ஒருவரை இந்த விவகாரத்திற்காக கட்சியை விட்டும் நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.