இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
2012ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் அரவான். இதில் கதாநாயகி தன்ஷிகா தவிர இன்னொரு கதாநாயகியாக மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகை அர்ச்சனா கவி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஞானக்கிறுக்கன் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்த இவர் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛நடிகையாக இருந்த தான் கதாசிரியராக உருவெடுத்து ஒரு படத்திற்கான கதையை தயார் செய்து வந்ததாகவும் ஆனால் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் தனது கனவுக்கு வேட்டு வைத்து விட்டதாகவும்' கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மோகன்லால் மற்றும் வித்யாபாலன் இருவரும் இணைந்து நடிக்கும் விதமாக ஒரு கதையை உருவாக்கி வந்தேன். எனது கனவு படம் என்று தான் அதை நினைத்தேன். அந்தக் கதை மோகன்லாலுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பிற்கு கிளம்பலாம் என்று நினைத்த சமயத்தில்தான் 96 படம் வெளியானது. கிட்டத்தட்ட நான் உருவாக்கி வைத்திருந்த கதையும், இந்த படமும் ஒரே போல இருந்ததால் அப்படியே அந்த கதையை கிடப்பில் போட்டு விட்டேன். என் கனவு அத்துடன் கலைந்து போனது” என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.