பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்து வரும் படம் டிராகன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 25 சதவீதம் முடிந்துள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜூன் 25 தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் டிராகன் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா நடனமாடப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் நடித்து வந்தபோதும், இதுவரை எந்த ஒரு படத்திலும் சிங்கிள் பாடலுக்கு நடனம் ஆடாத ராஷ்மிகா மந்தனா, முதன்முறையாக இந்த படத்தில் நடனமாடப் போகிறார். அவரது பான் இந்தியா மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இந்த பாடலுக்கு நடனமாட அவருக்கு பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.