இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு |

தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. பெப்சியின் தலைவராக இயக்குனர் ஆர் கே செல்வமணி தொடர்ந்து படங்களின் தோல்விக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், இப்போதைய தமிழ் சினிமாவின் போக்கு எப்படி வீழ்ச்சிக்கு வித்திடுகிறது என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜின் என்கிற படத்தின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார் ஆர்கே செல்வமணி. அப்போது அவர் பேசும்போது, “இப்போதெல்லாம் பெரும்பாலான வளர்ந்து வரும் கதாநாயகர்கள் யாருமே ஒரு இயக்குனரிடம் நேரடியாக கதை கேட்பது என்பது குறைந்து விட்டது. அவரிடம் மேனேஜர்களாக இருப்பவர்களும் உதவியாளர்களும் தான் கதையை கேட்கிறார்கள். இதனால் இயக்குனருக்கும் ஹீரோவுக்குமான ஒரு நட்பு, உறவு துண்டிக்கப்படுகிறது.
தவறான புரிதல் உருவாகிறது. இதை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும். தங்களது உதவியாளர்கள், மேனேஜர்கள் மூலமாக கதை கேட்பதை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் கதாசிரியர்களிடம் நேரடியாக அமர்ந்து முழு கதையை கேட்டால் படத்தின் தோல்வியையும் தவிர்க்கலாம். தங்களது திரையுலக பயணத்திலும் தொடர்ந்து வெற்றியை சந்திக்கலாம்” என்று கூறியுள்ளார்.