படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை | 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் | குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள் | ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் |

பாலிவுட்டில் கடந்த 2000ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‛ஹேரா பெரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 2006ல் இரண்டாம் பாகமாக உருவாகி வெளியானது. அதன் பிறகு தற்போது இதன் மூன்றாம் பாகம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் குணசித்திர நடிகர் பரேஷ் ராவல் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. முந்தைய இரண்டு பாகங்களிலும் இவர்கள்தான் நடித்திருந்தனர். இந்த நிலையில் படக்குழுவினர் யாரிடமும் எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் இந்த படத்தில் இருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார் பரேஷ் ராவல். இது படக்குழுவினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான அக்ஷய் குமார், நடிகர் பரேஷ் ராவலிடம் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பரேஷ் ராவல், என்னுடைய வழக்கறிஞர் என்னுடைய விலகல் மற்றும் வெளியேற்றம் குறித்து மிகச்சரியான ஒரு விளக்க நோட்டீசை அனுப்பியுள்ளார். அதில் என்னுடைய தரப்பு பதிலை அவர்கள் படித்தார்கள் என்றால் அனைத்து பிரச்சினைகளும் அப்போதே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் இருந்து பரேஷ் ராவல் விலகியதற்கு சம்பளப் பிரச்சனையும் காரணம் இல்லை, கதை குறித்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், அதை நேரடியாக சொல்லாமல் இப்படி திடீரென விலகி அதற்காக ஒரு விளக்க கடிதம் எழுதி வக்கீல் நோட்டீஸாக அனுப்பியிருப்பது பாலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




