இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழில் முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் நடிக்க இந்திய அளவில் பல முன்னணி நடிகர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட நாட்களாகவே லோகேஷ் கனகராஜை கதாநாயகனாக வைத்து படம் இயக்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அன்பறிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருந்தார். ஒரு சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. இந்த நிலையில் பிரபல நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ராக்கி, கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் விரைவில் துவங்கும் என்கிறார்கள்.