பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
பழம்பெரும் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகன் அர்ஜூன். தமிழ் பட வாய்ப்புகள் தேடி சென்னையில் அலைந்து கொண்டிருந்தபோது அவர் அதிகம் சந்தித்து வாய்ப்பு கேட்டது ராம.நாராயணனை பார்த்துதான். மற்றவர்கள் எல்லாம் 'சைனாகாரன் மாதிரி இருக்கிறான்' என்று விரட்டி விட்டபோது அவர்தான் அர்ஜூனை ஒரு நடிகராக ஏற்றார்.
1984ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த 'தாலியா பாக்யா' என்ற படத்தை தமிழில் 'நன்றி' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த கதையில் ஒரு வேலைக்காரன் பாத்திரம் முக்கியமானது. வாய்பேச முடியாத அந்த வேலைக்காரனை அந்த வீட்டு விதவை பெண் காதலிப்பதாக கதை. இந்த கேரக்டரில் அர்ஜூனை நடிக்க வைத்தார் ராம.நாராயணன். விதவை பெண்ணாக நளினி நடித்தார். அப்போது அர்ஜூனுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வராததால் அவரை பேச்சு திறனற்ற கேரக்டராக ராம நாராயணன் மாற்றினார் என்ற தகவலும் உண்டு.
இன்றைக்கு பல ஹீரோக்கள் சிக்ஸ்பேக் வைத்திருப்பதை பெருமையாக சொல்கிறார்கள். ஆனால் அர்ஜூன் தனது முதல் படத்திலேயே சிக்ஸ்பேக் வைத்து நடித்தார். இந்த படத்தின் நாயகன் கார்த்தி, நாயகி மகாலட்சுமி, வில்லன் சங்கிலி முருகன். சங்கர், கணேஷ் இசை அமைத்திருந்தனர், பழம்பெரும் நடிகர் ஏவிஎம் ராஜன் தயாரித்ததோடு முக்கியமான கேரக்டர் ஒன்றிலும் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரவுனி என்ற நாய் முக்கிய கேரக்டரில் நடித்ததும், அதுவே படத்தின் வெற்றிக்கு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.