பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ராப் பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர் வாசீகன். இலங்கையை சேர்ந்த இவர் சுயாதீன பாடல்கள் மூலம் பிரபலமானவர். தற்போது இவர் 'மைனர்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். சார்லி, செண்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெஜி செல்வராசா ஒளிப்பதிவு செய்கிறார். சூர்ய பிரசாத் இசை அமைக்கிறார்.
அரபி புரொடக்ஷன் மற்றும் வினயன் வெண்ட்சர்ஸ், மே டே புரொக்டஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 'பைண்டர்' படத்தை இயக்கிய வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது "இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். அந்த காதல் மீண்டும் சேர்ந்ததா? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை. படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது" என்றார்.