மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் குறிப்பாக தமிழ், தெலுங்கு சினிமாவில் பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகளின் ஆதிக்கம்தான் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அங்கு ஓரிரு படங்களில் நடித்து பெரிய வரவேற்பைப் பெறாத நடிகைகள் அப்படியே தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். அதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாம்.
இப்போதும் பாலிவுட் நடிகைகளுக்கு சிலர் முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் இங்குள்ள நடிகைகளும் மற்ற மொழிகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர். குறிப்பாக மலையாள நடிகைகள் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிகம் நடிக்கின்றனர். இப்போது அந்த இடத்திற்கு கன்னட நடிகைகளும் போட்டிக்கு வர ஆரம்பித்துள்ளார்கள்.
ராஷ்மிகா மந்தனாவின் வருகை, வெற்றிக்குப் பிறகு தற்போது அந்த டிரெண்ட் ஆரம்பித்துள்ளது. 'கேஜிஎப்' நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்த 'ஹிட் 3' கடந்த வாரம் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. அடுத்து மற்றொரு கன்னட நடிகையான ருக்மணி வசந்த் என்டிஆரின் 31வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் அப்படத்தை இயக்கி வருகிறார். ருக்மணி தமிழில் அறிமுகமாகும் 'ஏஸ்' இந்த மாதம் வெளியாகிறது. அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மதராஸி' படத்தில் நடித்து வருகிறார்.
எந்த மொழியிலிருந்து வந்தாலும் படம் வெற்றி என்றால் சென்டிமென்ட்டாக அதை பாலோ செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் சினிமாக்காரர்கள்.