அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவில் படங்களை வெளியடுவதற்கான சரியான ஒரு நாளைத் தேடிப் பிடிப்பது என்பது பெரிய விஷயமாக மாறிவிட்டது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் அதற்கு ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்பும் படங்களை வெளியிட முடிவதில்லை. சிறிய படங்களை வெளியிட சரியானதொரு இடைவெளிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
நாளை 'ரெட்ரோ' என்ற பெரிய படம் வந்தாலும், கூடவே 'டூரிஸ்ட் பேமிலி' என்ற சிறிய படத்தையும் தைரியமாக வெளியிடுகிறார்கள். 'ரெட்ரோ' படத்திற்குப் போக மீதி கிடைத்த தியேட்டர்களில்தான் 'டூரிஸ்ட் பேமிலி' வெளியாகிறது.
அடுத்த வாரம் மே 9ம் தேதிக்கும் சில பல படங்களை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அவை சிறிய படங்களாகத்தான் இருக்கப் போகிறது. அதற்கடுத்து மே 16ம் தேதி சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படமும், சூரி நடித்துள்ள 'மாமன்' படமும், நவீன் சந்திரா நடித்துள்ள 'லெவன்' படமும் வெளியாக உள்ளன.
அதற்கடுத்த வாரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படமும், சண்முகப்பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' படமும் வெளியாக உள்ளது. கவுதமன் நடித்துள்ள 'படையாண்ட மாவீரா' படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதென தற்போது அறிவித்துள்ளார்கள்.
மே மாதம் நாளை ஆரம்பிக்க உள்ள நிலையில் கோடை விடுமுறைக் காலம் என்பதால் படத்தை வெளியிட பலரும் தயாராகி வருகிறார்கள். அதனால், மே ரிலீஸ் பட்டியலில் புதிது புதிதாக படங்கள் சேர்ந்து வருகின்றன.