நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

இந்தியத் திரையுலகத்தில் பெரும் வசூல் சாதனை படைத்த 'பாகுபலி 2' படம் வெளிவந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தெலுங்குத் திரையுலகத்தை சர்வதேச அளவில் எடுத்துச் சென்ற படமாக அது அமைந்தது.
அந்த சரித்திரப் படத்திற்குப் பிறகு இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான 'மகாபாரதம்'-ஐ தனது கனவுப் படம் என பேட்டிகளில் சொல்லி வந்தார். அந்தப் படத்திற்குரிய ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் ஏற்கெனவே செய்து வருகிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 'ஹிட் 3' படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ராஜமவுலி. அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் 'மகாபாரதம்' படத்தில் நானி நடிப்பது உறுதியானதா?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ராஜமவுலி, “நானி அதில் நடிக்கிறார் என்பது மட்டும் பிக்ஸ் ஆகிவிட்டது” என்றார்.
ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படத்தில் சமந்தாவின் காதலராக கொஞ்ச நேரமே நடித்து மனதில் இடம் பிடித்தார் நானி. அதன்பின் ராஜமவுலியின் இயக்கத்தில் அவர் நடிக்கவில்லை. இப்போது 'மகாபாரதம்' படத்தில் நானி நடிப்பது குறித்து முதல் அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.




