புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் |
அட்லர் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம் 'சொட்ட சொட்ட நனையுது'. தலைப்பை பார்த்து காதல் படம் என்று நினைக்க வேண்டாம். இது சொட்டை தலையர்களை மையமாக கொண்ட காமெடி படம். மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் பரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் சிலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெஞ்சித் உன்னி இசை அமைத்துள்ளார், ரயீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் நிஷாந்த் கூறும்போது "இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான கமர்ஷியல் படமாக சிரிக்க வைக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது" என்றார்.