
கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்!
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களுக்கு பிறகு வட சென்னை பாக்சிங் கதையில் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு ‛நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான்" போன்ற படங்களை இயக்கினார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரரான பல்வங்கர் பலூ என்பவரின் வாழ்க்கை வரலாறை படமாக்கப்போவதாக தெரிவித்தார். அவரது வாழ்க்கை வரலாறை ராமச்சந்திரன் குஹா என்பவர், ‛கார்னர் ஆப் எ பாரின் பீல்ட்" என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அதை தழுவி இந்த படத்தை தான் இயக்கப் போவதாகவும் கூறுகிறார் பா. ரஞ்சித்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!