பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

2028ம் ஆண்டு நடைபெற உள்ள 100வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 'ஸ்டன்ட் டிசைன்' பிரிவு சேர்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'த அகாடமி' அவர்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி, “இறுதியாக…100 வருட காத்திருப்புக்குப் பிறகு…2027ல் வெளியாகும் படங்களுக்கான புதிய ஆஸ்கர் ஸ்டன்ட் வடிவமைப்பு பிரிவுக்காக மகிழ்ச்சி. இந்த வரலாற்று அங்ககீகாரத்தை சாத்தியமாகக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ ஹாரா மற்றும் ஸ்டன்ட் சமுகத்திற்கும், ஸ்டன்ட் வேலையின் சக்தியை கவுரவித்த 'த அகாடமி' தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோருக்கும் மிகப் பெரிய நன்றி.
இந்த அறிவிப்பில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் அதிரடி காட்சி பிரகாசிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'த அகாடமி' வெளியிட்ட அறிவிப்பில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற புலியுடன் ஜுனியர் என்டிஆர் மோதும் சண்டைக் காட்சியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் 95வது ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த ஒரிஜனல் பாடல்' பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.




