''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மலையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு விஜய்யுடன் 'மாஸ்டர்', தனுசுடன் 'மாறன்', விக்ரமுடன் 'தங்கலான்' போன்ற படங்களில் நடித்தவர், தற்போது கார்த்தியுடன் 'சர்தார்-2' படத்திலும், பிரபாசுடன் 'ராஜா சாப்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹிருதயபூர்வம்' என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் மோகன்லாலுடன் அவர் இருக்கும் படமும் அடங்கும்.
அப்படத்தை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் மோகன்லாலின் வயதையும், மாளவிகா மோகனின் வயதையும் குறிப்பிட்டு, ''ஏன் இந்த மூத்த நடிகர்கள் தங்கள் வயதுக்கு பொருந்தாத கதாபாத்திரங்களில் நடிக்க இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?'' என கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ''இது ஒரு காதல் படம் என்று யார் சொன்னது? உங்களின் அரைகுறையான ஆதாரமற்ற ஊகங்களால் மனிதர்களையும், ஒரு படத்தையும் மதிப்பிடுவதை நிறுத்துங்கள்'' என அறிவுரை வழங்கினார். மாளவிகாவின் இந்த பதில் வைரலாகி வருகிறது.