இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாலிவுட் நடிகரான ஆமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி 2023ம் ஆண்டு வெளியான 'லபாட்டா லேடீஸ்' என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றது. பல விருதுகளை பெற்றது, அதோடு இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் நிதான்ஷி கோயல், பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, சாயா கடம் மற்றும் ரவி கிஷன் ஆகியோர் நடித்திருந்தனர். இரண்டு இளம் புதுமணப் பெண்கள் தங்கள் கணவரின் வீடுகளுக்கு ரயில் பயணத்தின் போது கணவர்கள் மாறிவிடுவதால் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொன்ன படம்.
தற்போது இந்த படம் 2019ம் ஆண்டு வெளியான அரபு குறும்படமான 'புர்கா சிட்டி'யின் அப்பட்டமான காப்பி என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த குறும்படத்தின் காட்சி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஒரு ஷாப்பிங் மாலில் கணவன், மனைவி மாறிவிடுவதாக காட்டப்படுகிறது. லபாட்டா லேடீஸ் படத்தில் ரயில் பயணத்தில் மணமக்கள் மாறிவிடுவதாக காட்டப்பட்டது. தற்போது இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமையை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ஆனந்த் மகாதேவன் தனது முதல் திரைப்படமான 'கூங்காட் கே பட் கோல்' படத்தின் கதைதான் லபாட்டா லேடீஸ் படத்தின் கதையும் என்று குற்றம் சாட்டியிருந்தார். தற்செயலாக ரயிலில் ஏறி தவறான கணவர்களுடன் பம்பாயில் சிக்கிய இரண்டு மணப்பெண்களின் வாழ்க்கையை பற்றிய படம்தான் அவரது படத்தின் கதை.
படத்தின் கதை இன்னொரு படத்தின் காப்பி என்பதை விட இந்த படத்தை எப்படி ஆஸ்கருக்கு இந்திய அரசு அனுப்பியது என்பதுதான் பெரிய கேள்வியாக தற்போது எழுந்துள்ளது.