ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‛குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 30) மதியம் 1 மணியளவில் ‛காட் பிலஸ் யு மாமே' எனும் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையமைக்க, அனிருத் பாடியுள்ள இப்பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார். அத்துடன் பாடலில் உள்ள ராப் வரிகளை பால் டப்பா என்பவர் எழுதி பாடியுள்ளார். இந்த பாடலும் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் சமீபத்தில் எடுத்த செல்பி போட்டோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இளமையான தோற்றத்தில் காட்சியளித்துள்ள அஜித்தின் படத்தை பகிர்ந்து ‛இது ஏகே (அஜித் குமார்) சாரின் புது அவதாரம்' என்றும் பதிவிட்டுள்ளார். இது வைரலாகியுள்ளது.