லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன் சாய் அபயங்கர். 'கட்சி சேரா' என்ற ஆல்பத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அவரது அடுத்த ஆல்பமான 'ஆச கூட' என்ற ஆல்பமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தப் பிரபலமும், வரவேற்பும் அவரை அப்படியே சினிமாவுக்குள் இழுத்து வந்துவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார்.
இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் நான்காவது படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிம்பு நடிக்க உள்ள 49வது மற்றும் 51வது படங்களுக்கும் இவர்தான இசையமைப்பாளராக முடிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் தகவல். அடுத்து அட்லி-அல்லு அர்ஜுன் இணைய உள்ள பிரம்மாண்ட படத்திற்கும் இவரையே இசையமைப்பாளராக நியமிக்கப் பேசி வருகிறார்களாம்.
ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே தொடர்ந்து சில படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்படுவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.