நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்யு அருண்குமார் இயக்கியுள்ள படம் 'வீர தீர சூரன் 2'. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ரியா ஷிபு தயாரித்துள்ளார். இந்த படம் இன்று(மார்ச் 27) ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் காலையில் வெளியாகவில்லை.
இப்படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் பெற்ற தடைதான் இதற்குக் காரணம். இப்படத்தில் முதலீடு செய்திருந்த அந்த நிறுவனம் ஓடிடி உரிமையை தன் வசம் வைத்துள்ளது. ஓடிடி விற்பனை நடைபெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதால் தங்களால் ஓடிடி உரிமையை விற்க முடியவில்லை, அதற்கான நஷ்ட ஈட்டைத் தயாரிப்பாளர் தர வேண்டும் என அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனால் இந்த படத்தை இன்று காலை வரை வெளியிட டில்லி நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.
இது குறித்து நேற்று இரவு வரை தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. காலையில் தடையை விலக்கும் விதத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விக்ரமும் படத்தை வெளியிட முயற்சிகள் எடுத்து வந்தார். இதனால் படம் இன்று காலை 11 மணிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் வழக்கு இன்றும் நடந்தது. அப்போது படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேசமயம் இந்த படத்தை வெளியிட வேண்டி சமரச பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக இருதரப்பினரும் பேசி சுமூக முடிவை எடுத்துள்ளனர். அதை நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இப்படத்திற்காக விதிக்கப்பட்ட 4 வாரங்கள் தடையை நீதிமன்றம் நீக்கியது. இதனால் வீர தீர சூரன் படம் மாலை முதல் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது.
மாலை முதல் படம் ரிலீஸ்
முன்னதாக இப்பிரச்னை தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட ஆடியோ பதிவில், ‛‛வீர தீர சூரன் படம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களும், விநியோக உரிமையாளர்களும் பேசினர். அநேகமாக மாலை 4 மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என சொல்லப்படுகிறது. மாலை 6 மணி காட்சி வெளியாக அதிக வாய்ப்புள்ளது'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.