அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் |
இந்த வாரம் ஓடிடி தளங்களில் முபாசா : தி லைன் கிங், தி ஸ்டுடியோ, செருப்புகள் ஜாக்கிரதை, விடுதலை 2 என பல படங்கள் இந்த வாரம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
முபாசா - தி லைன் கிங் : முபாசா - தி லயன் கிங் என்பது 1994 ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் செய்யப்பட்ட அசல் படமான தி லயன் கிங்கின் முன்னுரை மற்றும் 2019ம் ஆண்டு வெளியான ரீமேக்கின் தொடர்ச்சி. இந்த திரைப்படம் மார்ச் 26 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது.
தி ஸ்டூடியோ : இந்த வாரம் வரவிருக்கும் நகைச்சுவைத் தொடர் இது. திரைப்பட ஸ்டுடியோவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவரான மேட் ரெமிக் வேடத்தில் சேத் ரோஜென் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் மார்ச் 26 அன்று AppleTV+ தளத்தில் ஒளிபரப்பாகிறது.
செருப்புகள் ஜாக்கிரதை : தமிழில் உருவாகி உள்ள படம் செருப்புகள் ஜாக்கிரதை. ஒரு செருப்பை மையமாகக் கொண்ட நகைச்சுவை திரைப்படம். சிங்கபுலி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பல கதாபாத்திரங்களுடன் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த தொடராக வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 28 அன்று ஜீ 5 தளத்தில் ஒளிபரப்பாகிறது.
விடுதலை - பார்ட் 2 : விடுதலை பகுதி 1-ன் தொடர்ச்சியாக, வெளியான படம் விடுதலை 2. பணிவான பள்ளி ஆசிரியராக இருந்து தீவிர கம்யூனிஸ்ட் தலைவராக மாறிய பெருமாள் வாத்தியாரின் முழுமையான கதை. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் முதன்மை வேடத்தில் நடித்தனர். வெற்றிமாறன் இயக்கினார். இந்த திரைப்படமும் மார்ச் 28 அன்று ஜீ 5 தளத்தில் ஒளிபரப்பாகிறது.
தி லைப் லிஸ்ட் : லோரி நெல்சன் ஸ்பீல்மேனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் தி லைப் லிஸ்ட். லெக்ஸ் ரோஸ் (சோபியா கார்சன்) தனது தாயின் மறைவுக்குப் பிறகு தனது குழந்தைப் பருவப் ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தைத் தொடங்குவதைப் போல இதன் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 28 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிறது.