சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜையை சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமாகி உள்ளது. படப்பிடிப்பு ஆரம்பமான உடனேயே நயன்தாராவுக்கும், உதவி இயக்குனர் ஒருவருக்கும் மோதல் நடந்துள்ளது. அந்த உதவி இயக்குனரை நயன்தாரா கண்டபடி திட்டியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட சுந்தர் சி, உடனே படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். நயன்தாராவை நாயகியாக வைத்து படத்தைத் தொடர முடியாது என்று கோபப்பட்டிருக்கிறார்.
அதன்பின் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இந்த விவகாரத்தில் தலையிட்டு நயன்தாராவிடம் பேசி சரி செய்திருக்கிறார். அதன்பின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியுள்ளார்கள்.
அதேசமயம், நயன்தாராவை படத்திலிருந்து தூக்கிவிட்டு அவருக்குப் பதிலாக தமன்னாவை நடிக்க வைக்கலாம் என சுந்தர் சி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்திலேயே மோதல் என்றால் படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதில் வேறு எந்த சிக்கலும் வரக் கூடாது என தயாரிப்பு நிறுவனமும் யோசிக்க ஆரம்பித்துள்ளதாம்.
நயன்தாரா படத்தில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது தமன்னா புதிதாக வருவாரா என்பது விரைவில் தெரிய வரலாம். தனுஷுடனான மோதல், இப்போது சுந்தர் சியுடனான மோதல் என சமீபகாலமாக நயன்தாராவின் இமேஜ் தாறுமாறாக சரிந்து வருகிறது.