2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் 'ஹரி ஹர வீரமல்லு' படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இது பவன் கல்யாண் நடிக்கும் முதல் பீரியட் படம். இப்படம் 17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன் - அட்வென்ச்சர் படமாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இதில் பாபி தியோல், நிதி அகர்வால், நாசர், ரகு பாபு, சுனில், நோரா பதேகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஏற்கனவே இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தாண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர். இப்போது ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் இப்படம் வருகின்ற மே 9ம் தேதி அன்று தள்ளி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.