மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் | பிளாஷ்பேக் : தமிழில் சோபிக்க முடியாமல் போன பாலசந்தர் அறிமுகம் | பிளாஷ்பேக் : மின்னி விலகிய வரதன் | வட சென்னையில் இரண்டு தியேட்டர்கள் நிரந்தர மூடல் | இன்னமும் இறுதி ஆகாத 'இளையராஜா' பயோபிக் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மூன்று இளம் இயக்குனர்கள்! | குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பாலிவுட்டில் ஒரு பக்கம் கபூர்களின் ஆதிக்கம் அதன் பிறகு கான்களின் ஆதிக்கம் இருந்தாலும் கூட தனக்கென ஒரு பாணியை பின்பற்றி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் நடிகர் கோவிந்தா. சமீப நாட்களாக தனது மனைவியுடன் விவாகரத்து என்பது போன்ற சர்ச்சை செய்திகளில் பரபரப்பாக இடம் பிடித்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவதார் படத்தில் கதாநாயகனாக நடிக்க வந்த வாய்ப்பை தான் மறுத்து விட்டதாக ஒரு புதிய தகவலை கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் கோவிந்தா.
இது பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, ''ஒரு முறை அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது சர்தார்ஜி ஒருவருக்கு பிசினஸ் ஐடியா ஒன்று கொடுத்தேன். அது அவருக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அமெரிக்கா சென்ற போது, என்னை அவர் அழைத்துச் சென்று பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு நானும் அவர்களை எனது இடத்திற்கு வரவழைத்து விருந்தளித்தேன்.
அப்போது ஜேம்ஸ் கேமரூன் உருவாக்க இருக்கும் புதிய படம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அந்த கதையைக் கேட்டதுமே எனக்கு அந்த படத்திற்கு அவதார் என டைட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. உடனே அதை ஜேம்ஸ் கேமரூனிடம் கூறினேன். அப்போது அவர் என்னிடம் இந்த படத்தில் நீங்கள் கதாநாயகனாக நடிக்கிறீர்களா என்று கேட்டதுடன் 410 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்றும் கூறினார். எனக்கு சம்பளமாக 18 கோடி வரை தருவதாகவும் சொன்னார்.
எனக்கு தேதிகளும் சம்பளமும் பிரச்னை இல்லை. ஆனால் படத்தின் கதாநாயகன் ஊனமுற்றவராக நடிக்க வேண்டும் என்கிற ஒரு காரணமும் படத்தில் பெரும்பாலான காட்சிகள் உடலுக்கு பெயிண்ட் அடித்துக் கொள்ள வேண்டி இருக்கும் என்கிற காரணத்தினால் அது என்னை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து விடும் என நினைத்தும் அந்த வாய்ப்பை நான் மறுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
அவதார் படம் வெளியாகி இத்தனை வருடங்கள் கழித்து கோவிந்தா இப்படி கூறியுள்ளதை பார்த்து ரசிகர்கள் பலரும், ஒரு படத்தில் விமல் சந்தானத்திடம் கேட்பது போல, “ஏங்க இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு ?” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.