குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் ‛எந்திரன்'. இந்த படத்தின் கதைத் திருட்டு விவகாரத்தில் பிப்., 17ல் பிஎம்எல்ஏ (PMLA) விதிகளின் படி ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதன் மதிப்பு 10 முதல் 11 என கூறப்படுகிறது. இந்த விஷயம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த ஷங்கர், ‛‛எந்திரன் படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்தது. இரு தரப்பு ஆதாரங்கள், வாதங்களை ஆராய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிக்கிறது. அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார் ஷங்கர். இந்த வழக்கு இன்று(மார்ச் 11) விசாரணைக்கு வந்தபோது, ‛‛தனி நபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருக்கக்கூடாது'' என கருத்து தெரிவித்த நீதிமன்றம் ஷங்கருக்கு சொந்தமான 11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்., 21க்கு தள்ளி வைக்கப்பட்டது.