ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
முன்னணி பாலிவுட் குணசித்ர நடிகராக இருந்தவர் உத்தம் மொகந்தி. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் ஒடிசா, பெங்காலி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உத்தம் மொகந்திக்கு கல்லீரல் பாதிப்பு பிரச்னை ஏற்பட்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிக்சை பலன் இன்றி நேற்று இறந்தார். அவருக்கு வயது 66. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மரணம் அடைந்த உத்தம் மொகந்திக்கு அபராஜிதா என்ற மனைவியும், மகனும் உள்ளனர்.
உத்தம் மொகந்தியின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "ஒடிசாவின் பிரபல நடிகர் உத்தம் மொகந்தியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு ஒடியா கலைத் துறையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடியா திரையுலகில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, துயருற்ற குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
மறைந்த உத்தம் மொகந்தி, ஒடியா சினிமாவில் பலமான ஆளுமையாக இருந்தார். ஒடிசா மாநில அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது உடலுக்கு முதல்வர் மோகன் சரண் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடந்தது.