வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் |
ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். தனது இரண்டாவது படமான 'லவ் டுடே'வை இயக்கி அதில் தானே கதாநாயகனாக நடித்து ஒரு நடிகராகவும் இளைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்தார். அந்த படம் கொடுத்த வெற்றியில் தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தின் 'டிராகன்' என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். கடந்த வாரம் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
குறிப்பாக ஷங்கர் உள்ளிட்ட மிகப்பெரிய இயக்குனர்கள் கூட இந்த படத்தை, பிரதீப் ரங்கநாதனின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'உப்பென்னா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவரும் தற்போது ராம்சரணின் படத்தை இயக்கி வருபவருமான இயக்குனர் புச்சி பாபு சனா, டிராகன் படம் பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிராகன் படம் நேற்று இரவு பார்த்தேன். ஒரு நல்ல மெசேஜூடன் கூடிய உணர்ச்சிகரமான, அதேசமயம் பெர்பெக்ட்டான பொழுதுபோக்கு படம். பிரதீப் ரங்கநாதன் இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் விதமாக என்ன ஒரு அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவின் எழுத்துக்கள், குறிப்பாக கிளைமாக்ஸ் ரொம்பவே சூப்பராக இருந்தது” என்று கூறியுள்ளார் புச்சி பாபு சனா.