தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரேமம் புகழ் நடிகை சாய் பல்லவி முதல் படத்திலேயே தென்னிந்திய அளவில் ரசிகர்களை வசீகரித்தவர். அதன்பிறகு அவர் மலையாளத்தை விட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே தொடர்ந்து ஹிட்டாகி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் நாகசைதன்யாவுடன் அவர் இணைந்து நடித்த தண்டேல் என்கிற திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல கடந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படத்தில் ஒரு ராணுவ வீரரின் மனைவி கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். ரசிகர்களும் விமர்சகர்களும் கூட அவரது நடிப்பை பாராட்டி நிச்சயமாக அவருக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பாராட்டினார்கள்.
அதே சமயம் இந்த காரணத்திற்காக அல்லாமல் வேறு ஒரு காரணத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என விரும்புகிறார் சாய் பல்லவி. இது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, “என்னுடைய பாட்டி எனது திருமணத்தின் போது நான் அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்று ஸ்பெஷலாக ஒரு புடவையை பரிசளித்து வைத்திருக்கிறார். திருமணம் எப்போது என்பது தெரியாது. அதே சமயம் தேசிய விருது போன்ற நாம் விரும்பும் உயரிய விருதை பெரும் விழாவில் கலந்து கொள்ளும்போது அந்த புடவையை அணிந்து கொள்வது தான சரியாக இருக்கும். அதனாலேயே எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.