மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களாக விஜய் மற்றும் அஜித் இருக்கிறார்கள். 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அவர்களுக்கான ரசிகர்கள் மிக அதிகம். இருவரது ரசிகர்களும் சமீப காலமாகத்தான் சமூக வலைத்தள சண்டைகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் அரசியலில் ஈடுபட்டதே அதற்குக் காரணம். பல விஜய் ரசிகர்கள் சினிமாவை விட்டுத் தெரிந்த அரசியலை விமர்சிக்கப் போய்விட்டார்கள்.
இருந்தாலும் தமிழ் சினிமா உலகில் வசூலில் சாதனை படைத்தவராக அஜித்தை விடவும் விஜய்தான் முன்னிலையில் இருக்கிறார். விஜய் நடித்து சமீபமாக வெளிவந்த படங்கள் பெரும் வசூலைக் குவித்துள்ளன. 2012ல் வெளிவந்த 'துப்பாக்கி' படத்தில் ஆரம்பமான அவரது 100 கோடி வசூல் தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. இடையில் 'தலைவா, ஜில்லா' உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டும்தான் பெரிய வசூலைக் குவிக்கவில்லை.
'கத்தி, புலி, தெறி, பைரவா, மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ,' ஆகிய படங்கள் தொடர்ந்து 100 கோடி, அதற்கும் மேலான வசூலைப் பெற்றன. 'லியோ' படம் 600 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
ஆனால், அது போன்ற வசூலை அஜித் படம் இதுவரை பெற முடியவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயமாக உள்ளது. அஜித்தின் அதிகபட்ச வசூலாக 200 கோடி வசூலைப் பெற்ற 'துணிவு' படம் தான் பட்டியலில் முதலில் இருக்கிறது. அதற்கடுத்து 'விஸ்வாசம், வலிமை, வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைப் பெற்றுள்ளன. அதிலும் ஓரிரு படங்கள் பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்.
சமீபத்தில் வெளியான 'விடாமுயற்சி' படம் பெரிய வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் 100 கோடி வசூலைத் தாண்டியதும் தனது வசூலை குறைத்துக் கொண்டது.
விஜய்யின் கடைசி படமாக 'ஜனநாயகன்' படம் உருவாகி வருகிறது. கடைசி படம் என்பதால் எப்படியும் அந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க முன் வருவார்கள். அதனால், இப்போதே 500 கோடி வசூலைக் கடக்கும் என சொல்லலாம்.
விஜய் சினிமாவை விட்டு விலகுவதற்குள் அவரது வசூலை அஜித் தனது ஒரு படத்தின் மூலமாகவாவது முறியடிக்க வேண்டும். ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி' படம் மட்டுமே அதற்கான ஒரே வாய்ப்பு. அப்படி ஒரு வசூல் சாதனையை அப்படம் பெற வேண்டும் என்றுதான் அஜித் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 'குட்' ஆன வசூலாக அமைந்து விஜய்யின் வசூல் சாதனையை 'பீட்' செய்யுமா 'குட் பேட் அக்லி'?.