ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24 ஹெச் கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டு மூன்றாம் பரிசை பெற்றார். சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த கார் பந்தய போட்டியில் அஜித் மற்றும் குழுவினர் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பெற்றனர். இதன் மூலம் சர்வதேச கார் பந்தய போட்டி அரங்கில் அஜித் மீதான பார்வை விரிய தொடங்கியது. இதனால் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தொடர் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் துபாயில் சொகுசு காரில் இருந்து அஜித் இறங்கிச் செல்லும் வீடியோ ஒன்றை அவரது மேலாளர் வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு சொகுசு காரான லம்போகினி நிறுவனத்தின் 11559 என்ற எண் கொண்ட வெள்ளை நிற சொகுசு காரில் இருந்து அஜித் இறங்கி செல்லும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை நிற ஜெர்கினுடன் கூலஸ் அணிந்தபடி ஸ்டைலாக அஜித் இறங்கிச் செல்லும் அந்த காட்சி அவரது ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளது.
இதனிடையே மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 6 ம் தேதி வெளியான விடாமுயற்சி படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் அந்தப் படத்தில் வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 900 தியேட்டர்களில் வெளியான இப்படம் உலகம் முழுக்க 6 நாள் முடிவில் ரூ.139 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.