‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா 2 என்கிற பெயரில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, வில்லன் பஹத் பாசில் ஆகியோர் இந்த படத்திலும் இடம் பிடித்தனர். முதல் பாகத்தை விட மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படம் கிட்டத்தட்ட 1800 கோடிக்கு மேல் வசூலித்தது.
படம் வெளியாகி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சக்சஸ் மீட்டை தற்போது புஷ்பா 2 படக்குழுவினர் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் பேசும்போது புஷ்பா 2 பட ரிலீஸுக்காக தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்ட ஹிந்தி படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசும்போது, ‛‛எனக்கு பாலிவுட் என்கிற வார்த்தையை பயன்படுத்துவதில் பெரிய விருப்பமில்லை. புஷ்பா ரிலீஸுக்கு முன்னதாக ஹிந்தி சினிமாவை சேர்ந்த ஒருவரை நான் தொடர்பு கொண்டேன். அவர்களது திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாவதாக இருந்தது. எங்களுடைய படம் அதே சமயத்தில் வெளியாக இருப்பதை அறிந்து புஷ்பா படத்திற்கு நாங்கள் எல்லாம் ரசிகர்கள் நீங்கள் வருவதாக இருந்தால் நாங்கள் தாராளமாக வழி விட்டு ஒதுங்கிக் கொள்கிறோம் என்று கூறி தங்களது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி'' என்று கூறினார்.
அவர் சம்பந்தப்பட்ட அந்த படத்தின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அவர் கூறியது விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி, வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கும் ‛ச்சாவா' படக்குழுவினர் தான் புஷ்பா 2க்காக தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்டார்கள் என்று பரவலாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல ச்சாவா படத்தின் கதாநாயகியும் ராஷ்மிகா மந்தனா தான் என்பதால் அவர் மூலமாக அல்லு அர்ஜுன் இந்த முயற்சி எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.