'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் பிப்., 6ம் தேதி வெளியான படம் ‛விடாமுயற்சி'. ஆக் ஷன் கலந்த கதையில் இப்படம் வெளியானது. அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்தது.
தமிழகம் முழுக்க சுமார் 900 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. ஒரு தரப்பினர் படம் சூப்பர் என்றும், மற்றொரு தரப்பினர் படம் சுமார் என கலவையான விமர்சனங்களை தந்தனர். இருப்பினும் இப்படம் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.
நான்கு நாட்களில் தமிழகத்தில் ரூ.60 கோடியும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் 10 கோடியும், உலகம் முழுக்க ரூ.30 கோடியும் வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.