'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'டேக் ஆப்', 'மாலிக்' ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன், தற்போது மம்முட்டி நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் நயன்தாராவும் தற்போது இணைந்துள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது,
நயன்தாரா - மம்முட்டி கூட்டணி இதற்கு முன், 'பாஸ்கர் தி ராஸ்கல்', 'புதிய நியமம்' உள்ளிட்ட சில படங்களில் மம்மூட்டி - நயன்தாரா கூட்டணி இணைந்து நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ‛எம்எம்எம்என் (MMMN)' என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.